Scythe cut for the young man who made noise and played Babji!

திருப்பூரில் இரவு நேரத்தில் தூங்கவிடாமல் சத்தம் போட்டுக்கொண்டு பப்ஜி விளையாடிய இளைஞரை முதியவர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் பாறைக்காட்டைச் சேர்ந்தவர் கார்த்திக். கார்த்திக் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு அருகிலுள்ள துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டு சத்தம் போட்டுக் கொண்டு பப்ஜி விளையாடுவது வழக்கமாம். இதனால் வீட்டின் அருகில் இருக்கும் ராமசாமி என்ற முதியவர் அடிக்கடி கார்த்திக்கை எச்சரித்துள்ளார். சத்தம் போடாமல் விளையாடும்படியும், இப்படி சத்தம் எழுப்புவதால் தூக்கம் கெடுகிறது எனவும் எச்சரித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கார்த்திக்கிற்கும் முதியவருக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisment

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி, வீட்டிற்குள் சென்ற முதியவர் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து கார்த்திக்கை வெட்டியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த இளைஞரை அரிவாளால் வெட்டிய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.