Skip to main content

கூச்சலிட்ட ரசிகர்கள்... கட்டுப்படுத்திய சூர்யா!

 

Screaming fans... controlled by Surya!

 

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதீதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் இன்று நடைபெற்றது. திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் டூ டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் நடிகர் சூர்யாவும் இந்த விழாவிற்கு வந்திருந்தார். நிகழ்ச்சியின் மேடையில் ஒளிப்பதிவாளரும், குணச்சித்திர நடிகருமான இளவரசு பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது ரசிகர்கள் சூர்யாவை பார்த்து கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். 'இருங்கப்பா கொஞ்ச நேரம் இருங்க... படத்தை பற்றி கொஞ்ச நேரம் பேசிக்கிறேன்' என்று கூறிய இளவரசு 'தம்பி கொஞ்சம் எழுந்திருச்சு கைய காட்டுப்பா' என சூர்யாவிடம் கோரிக்கை வைத்தார்.

 

அதனையடுத்து எழுந்த நடிகர் சூர்யா, ரசிகர்களை அமைதி காக்கும்படி கைகளை உயர்த்தி செய்கை செய்தார். அதன் பிறகு அவரிடம் மைக் கொடுக்கப்பட்ட நிலையில் 'உங்களுக்காக தான் வந்திருக்கிறோம். உங்கள் இடத்துக்கு வந்திருக்கோம். ஸ்டேஜில் நானும் வருவேன், கார்த்தியும் வருவார், அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமை வேண்டும். உங்களுடைய அமைதி வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி' எனக் கூறிய நிலையில் ரசிகர்கள் அமைதி காத்தனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !