Advertisment

'கொளுத்தும் கோடை வெயில்; இதுமட்டும் கூடாது'- ஆட்சியர்களுக்குப் பறந்த அதிரடி உத்தரவு

'The scorching summer sun; This is not enough'- the action order flown to the Collectors

Advertisment

தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது என அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தொடர்ந்து நாளை பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கோடை விடுமுறையில் வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் எந்தவிதமான சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தக்கூடாது எனத்தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியளர்களுக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் சிறுவர், சிறுமிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

schools summer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe