Skip to main content

மனிதேய மக்கள் கட்சிக்கு 'கத்தரிக்கோல்' சின்னம் ஒதுக்கீடு!

Published on 09/03/2021 | Edited on 09/03/2021
கக

திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. ஒரு தொகுதியில் 'கத்தரிக்கோல்' சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்திலும் அக்கட்சி போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களை எளிதில் ஏமாற்றிவிட முடியாது... அதற்கு உதாரணம்... மணப்பாறை மமக வேட்பாளர் பிரச்சாரம்..

Published on 04/04/2021 | Edited on 04/04/2021
ttttt

 

இறுதிநாள் பிரச்சாரத்தில் வேட்பாளா்கள் தங்களுடைய முழு நேரத்தையும் செலவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இன்று மாலை 7 மணிக்குள் தொகுதி முழுவதையும் சுற்றி வந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு ஓடி கொண்டிருக்கின்றனா்.

 

மணப்பாறை தொகுதி சட்டமன்ற மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமது பிரச்சாரத்தில் பேசியபோது, இந்த தொகுதியை பொருத்தவரை இலை, சூரியன் இரண்டை தவிர வேறு எந்த சின்னமும், கட்சியும் இங்கு தெரியாது. இரண்டு முறை இலைக்கு ஓட்டுபோட்டு கடந்த 10 வருடமாக அவா் இந்த தொகுதியில் வளா்ச்சி திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனா்.

 


அதிமுக வேட்பாளா் சந்திரசேகரை பல இடங்களில் இருந்து மக்கள் திருப்பி அனுப்பி உள்ளனா். அதிலும் அவருடைய கட்சியை சோ்ந்தவா்களே அவருக்கு வாக்களிக்க தயாராக இல்லை என்றும், பணத்தை மட்டுமே நம்பி இந்த முறை தோ்தலை சந்திக்கிறார். இந்த முறை பணம் வெற்றிபெறாது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.

 


மிக முக்கியமான பிரச்சனை என்றால் இந்த தொகுதியில் நியாயவிலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி மனிதர்கள் சாப்பிடுவது போன்று இல்லை என்றும், அதை கோழி கூட சாப்பிட மாட்டேனுது என்றும் பொதுமக்கள் முன் வைக்கின்றனா். துர்நாற்றம், ரப்பா் போன்று இருக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிமுக வேட்பாளரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனா். பொருாளாதாரத்தில் அடித்தட்டு மக்களை கொண்ட தொகுதி ரேஷன் அரிசி தரமில்லாமல் இருப்பதை முதல்கட்டமாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

 


மணப்பாறைப் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை கூட அதிமுக வேட்பாளா் நிறைவேற்றவில்லை, அதற்கான முயற்சியும் அவரிடம் இல்லை. அன்றாட கூலியாக பணியாற்று குடும்பங்களில் இருந்து பேருந்து கட்டணம் செலுத்தி தினமும் இவ்வளவு தூரம் படிக்க அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. இந்த தொகுதியில் உள்ள மாணவ,மாணவிகள் படிக்க வேண்டும் என்றால், திருச்சிக்கோ, திண்டுகலுக்கோ செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது. நிச்சயம் திமுக ஆட்சி அமைந்த உடன் இந்த தொகுதிக்கு என்று அரசு கலை அறிவியல் கல்லூரி கொண்டு வருவேன்.

 

ttttt


 

ஆரம்பத்தில் இந்த தொகுதி குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட தொகுதி. ஆனால் கலைஞரின் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இந்த தொகுதிக்கு தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்த திமுக தலைவர் கலைஞரை இன்றும் மக்கள் மறக்காமல் இருக்கிறார்கள். தொகுதிக்குள் செல்லும்போது அவா்கள் அதை நினைவுகூறுகிறார்கள். அந்த நன்றி உணர்வு இன்று வரை அவா்கள் நினைவு கூறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.


அதேபோல விவசாயத்திற்கு காவிரியின் உபரி நீரை பொன்னனியாறு பகுதியோடு இணைத்து ஒரு கட்டிட கால்வாய் அமைத்து வறண்ட பகுதிகளில் விவசாயம் செய்யக்கூடிய பூமியாக மாற்ற திட்டம் இருக்கிறது. இதுக்குறித்த திட்டம் திமுகாவின் தோ்தல் அறிக்கையில் உள்ளது. அதற்கான நல்ல வரவேற்பை இந்த தொகுதி மக்களிடம் பார்க்க முடிகிறது.  விவசாயம் உயா்ந்தாலே மக்களின் வாழ்க்கை உயரும், எனவே அதை நிச்சயம் செயல்படுத்தி இந்த பூமியை விவசாய பூமியாக மாற்றுவேன்.


இந்த தொகுதியில் நிறைய கோவில்கள் உள்ளது. அதில் குறிப்பாக ஊனையூா் கோவில் ராஜகோபுரத்தை புனரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனா். இன்னும் பல கோவில் சீரமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனா். இந்து அறநிலையத்துறைக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே  அந்த நிதியில் இருந்து பணம் பெற்று நிச்சயம் அதை புனரமைத்து தருவேன் என்று உறுதி அளித்துள்ளேன்.


நான் பிரச்சாரத்திற்கு செல்லும் போது நான் கண்ணில் பார்த்து இதை உடனடியாக செய்ய வேண்டும் என்று நினைத்தது மிக முக்கியமானது என்றால் வேலையில்லாமல் இளைஞா்கள் இருக்கிறார்கள். எனவே வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தொழிற்பேட்டைகளை ஆரம்பித்து அதை சரி செய்ய திட்டமிட்டுள்ளேன்.


 மக்கள், இளைஞா்கள் அனைவருக்கும் அரசியலை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். அவா்களுக்கு நன்றாக தெரியும் யாரை நாம் தோ்ந்தெடுக்க வேண்டும் என்பது. மக்கள் மிகவும் கவனமாகவும், பரந்த சிந்தனை உடையவா்களாக இருக்கிறார்கள். அவா்களை எளிதில் ஏமாற்றிவிட முடியாது. அதற்கு உதாரணம் பாராளுமன்ற தோ்தல் தான். எனவே அவா்கள் உள்ளுர் அரசியல் முதல் உலக அரசியல் வரை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.


இளைஞா்களுடைய வாக்குகள் புதியவா்களை முன்னெடுக்கிறார்கள். அவா்கள் திராவிட இயக்கங்களை மட்டுமே சார்ந்து இருக்கிறார்கள். எனவே அவா்களிடம் நாங்கள் புதியவா்கள் என்பதை அவா்களுக்கு முன் வைக்கிறோம். பெரும்பான்மையாக இந்த பகுதியில் எல்லா சமூகத்தை சோ்ந்த மக்களும் இருக்கிறார்கள். எனவே ஒரு இஸ்லாமியா்களின் வாக்குகள் கணிசமாக இருந்தாலும் அனைவரும் தற்போது திமுக தான் வரவேண்டும் என்று விரும்புகின்றனா்.


இந்த தொகுதியில் உள்ள திமுகவினா் அவா்களே இங்கு போட்டியிடுவது போன்று முழு ஒத்துழைப்பையும் மனித நேய மக்கள் கட்சிக்கு தருகிறார்கள். எனவே இந்த முறை உதய சூரியன் இந்த தொகுதியில் உதிக்கும் என்று கூறினார்.

 

 

Next Story

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு கரோனா...

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

Jawahirullah

 

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் வாக்குப்பதிவு நாள் ஒருபுறம் நெருங்கிவரும் நிலையில், மறுபுறம் தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து மீண்டும் அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகள் சார்ந்த பரப்புரை கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாததால், கரோனா அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், சில கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், திமுக கூட்டணியில் பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு தற்பொழுது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.