Published on 23/08/2022 | Edited on 23/08/2022

உலகே உற்றுநோக்கும்படி கடந்த ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 தேதி வரை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக கடந்த ஜூலை 28 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை ஈடுகட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வருகின்ற சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.