schools teachers students police investigation

Advertisment

சென்னை புழல் சிறையில் உள்ள சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு பேர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புதிய புகார்கள் தொடர்பாக ஆதாரங்களைத் திரட்டும் பணியில் அசோக்நகர் மகளிர் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே, முன்னாள் மாணவி அளித்த பாலியல் தொல்லை புகாரில் ஆசிரியர் ராஜகோபாலன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு பேர் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் என்பவர் மீது மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்த கீழ்ப்பாக்கம் மகளிர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.