கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில், அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டது.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர்களுக்கு தலா 3.100 கி.கிராம் அரிசி, 1.200 கி.கிராம் பருப்பு, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு தலா 4.650 கி.கிலோ அரிசி, 1.250 கி.கிராம் பருப்பு வழங்கப்படுகிறது.
தமிழகஅரசு அறிவித்திருந்தபடி, இன்று சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ,மாணவிகளுக்கு அரிசி, பருப்பு வழங்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேனிலைப்பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவு பொருட்களை மாணவ மாணவிகள் வாங்கிச் சென்றனர்.