schools reopening minister sengottaiyan pressmeet erode

Advertisment

ஆய்வு செய்து படிப்படியாகப் பிற வகுப்புகளும் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "முதல் கட்டமாகத் திறக்கப்படும் 10, 12- ஆம் வகுப்புகளுக்காக 6,029 பள்ளிகள் தயாராக உள்ளன. 98% மாணவர்களின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன. விருப்பமுள்ள 10, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் பள்ளிக்குச் செல்லலாம். பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பிறகு தேர்வு குறித்து அறிவிக்கப்படும்" என்றார்.