Advertisment

இனி அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

 Schools operate all Saturdays-School Education Order!

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை அடுத்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அளித்து வந்தது. அதனையடுத்துபள்ளிகள், கல்வி நிலையங்கள் தொடர்ந்து திறக்கப்பட்டது. முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்பட்டது.

Advertisment

இதற்கிடையே தீபாவளி விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விடுமுறை நாட்களை ஈடுகட்ட இனிமேல் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் எனத் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisment

education TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe