Advertisment

6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை பள்ளி திறப்பு எப்போது? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!

schools opening minister discussion with education department officers

சென்னையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதலமைச்சரிடம் அமைச்சர் அறிக்கை அளிக்க உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

பின்னர், 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து அறிவிப்பைத்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

anbil mahesh discussion minister schools
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe