Published on 14/09/2021 | Edited on 14/09/2021

சென்னையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதலமைச்சரிடம் அமைச்சர் அறிக்கை அளிக்க உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து அறிவிப்பைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.