ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு! 

08:07 AM Jun 13, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் பள்ளிகள் இன்று (13/06/2022) திறக்கப்படுகின்றன. ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இன்று (13/06/2022) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களை வரவேற்க பள்ளிகள் தயாராக உள்ளன. வகுப்பறைகள், இருக்கைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளிகளில் முதல் நாளான இன்றே மாணவர்களுக்கான, பாடப்புத்தங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை புதிய மாணவர் சேர்க்கையும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கரோனா கட்டுப்பாட்டு விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பள்ளிகள் காலை 09.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை நடைபெறும் என்றும், அதற்கான மாதிரி பாடவேளையையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில், பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவைத் தவிர, பேரவையில் அறிவிக்கப்பட்ட, மாணவர்களுக்கான வெளிநாடு சுற்றுலா உள்ளிட்டத் திட்டங்களையும் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT