df

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் அவை திறக்கப்படுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது.

Advertisment

மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தனி மனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் ஒரு மேஜையில் இரண்டு மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் பாடம் நடத்தப்பட மாட்டாது எனவும், மாணவர்களை மன ரீதியாக தயார் செய்து, அதன் பிறகே பாடம் நடத்தப்படும் எனவும், ஒரு நாளைக்கு 5 வகுப்புக்கள் மட்டுமே எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக பள்ளிகள் 3.30 மணிக்கு நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment