கரோனா பரவலைத்தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள், ஜூன் 15-ஆம் தேதியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொற்று பரவல் குறையாததால், தேர்வுகளைத் தள்ளிவைக்கக்கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, ஜூன் 11-ஆம் தேதிக்கு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அறிவிக்கப்பட்டபடி ஜூன் 15ஆம் தேதியில் தேர்வுகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisment

Advertisment

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு ஜூன் 15இல் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, அசோக் நகரில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (08.06.2020) தேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.