Schools holiday in 8 districts due to incessant rains

Advertisment

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று (4.11.2023) மிகக் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மழையின் காரணமாக மாவட்ட நிர்வாகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில்பல மாவட்டங்களில் அதீத கனமழைக்குவாய்ப்பிருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில்,கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கைமற்றும் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.