Advertisment

கொட்டித்தீர்த்த கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை 

Schools closed due to heavy rains

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

Advertisment

சென்னையில் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது வரை மழை தொடர்வதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதால்வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டைபோன்ற மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Chennai rain
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe