கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாகபள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டநிலையில் அவை படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்தபிப்.8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளும் செயல்படதமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. 6,7,8 ஆகிய வகுப்புகள்எப்பொழுது திறக்கப்படும் என்ற கேள்விஎழுந்திருந்த நிலையில்,தற்போது 6,7,8 ஆகிய வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பு இல்லை எனபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ''தற்பொழுது 98.5 சதவிகிதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். 6,7,8, வகுப்பு மாணவர்களுக்கு டேப் (tab) வழங்கப்படும். ஆனால் இப்போது 6,7,8 வகுப்புகள் திறக்கப்படாது'' எனக் கூறியுள்ளார்.