to schools in Chennai Police are actively investigating

Advertisment

சென்னை அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ.நகரில்உள்ள 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளிகளில் இருந்து மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் செல்கின்றனர். பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். இதே போன்றுதிருமழிசையில் உள்ள பிரபல பள்ளிக்கும்வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசார்ணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் காவல்துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.