'10, 11, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்' -தமிழக அரசு அறிவிப்பு!

SCHOOLS ARE OPENING TAMILNADU GOVERNMENT ANNOUNCED

10, 11, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின்தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அக்டோபர் 1- ஆம் தேதி முதல் 10, 11, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம். பாடங்கள் தொடர்பான சந்தேகங்களைக் கேட்க பள்ளிக்கு மாணவர்கள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே செல்லலாம். ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிக்கு வரவழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்குசெல்லலாம்"இவ்வாறு அரசு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

OPENING schools tn govt
இதையும் படியுங்கள்
Subscribe