மக்கள் கூடுவதை தவிர்க்க, பள்ளி, கல்லூரி மைதானங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காய்கறி வாங்க மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் கரோனா பரவும் வாய்ப்பு அதிகம் என்பதால், பள்ளி, கல்லூரி மைதானங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சமுதாய நலக் கூடங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madras33_11.jpg)
அந்த மனுவில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் அனுமதி சீட்டுகளை வழங்கி, அந்த நாட்களில் மக்கள் பொருட்கள் வாங்க அனுமதிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரித்தது. அப்போது, பொருட்கள் வாங்க மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க, பேருந்து நிலையங்கள், விளையாட்டு மைதானங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு, வியாபாரம் நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர் விளக்கமளித்தார். அரசுத்தரப்பின் இந்த விளக்கத்தை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)