Schoolgirls attacked at the bus station!

Advertisment

மதுரையில் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் குழுவாக மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையின் பிரதான பேருந்துநிலையமாக இருக்கக்கூடிய பெரியார் பேருந்து நிலையத்தில் இன்று மாலை அரசு பள்ளி மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் குழுவாக பிரிந்து மாறிமாறி கூச்சலிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் பேருந்து நிலையத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியதோடு அங்கு இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சமீப காலமாக அரசு பள்ளிகளில் சில மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது, சக மாணவர்களை தாக்குவது, போதை பொருட்களை பள்ளியிலேயே பயன்படுத்துவது என பல்வேறு வீடியோ காட்சிகள் வெளியாகி தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில் நெல்லையில் அரசுப் பள்ளியில் சக மாணவர்களால் கல்லால் தாக்கப்பட்டு ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பள்ளி மாணவிகளின் மோதல் காட்சிகள் வெளியாகி மீண்டும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.