schoolgirl who was unconscious under the influence of liquor

சேலம் பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மது போதையில்மயங்கிக்கிடந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்குஅழைத்துச்சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே மாணவி வன்கொடுமைக்குஆளானதாகத்தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து விரைந்து சென்றபோலீசார்மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாணவி அந்த பகுதியில் உள்ள ஒருதனியார்பள்ளியில் படித்து வருவதும், மதுபோதையில்மயங்கிக்கிடந்ததும் தெரியவந்தது. மேலும், மருத்துவ பரிசோதனையில் மாணவி வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும் அவரை யாரோ இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்துஇறக்கிவிட்டுச்சென்றதும் தெரியவந்தது.

மாணவிக்கு யாரேனும் வற்புறுத்தி மது கொடுத்தனரா? அல்லது அவரே மது அருந்தினாரா என்று பல்வேறு கோணங்களில்போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.