
திருவண்ணாமலையில் நேற்று பள்ளியில் திடீரென மயங்கி விழுந்த பள்ளி மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்துள்ள ராந்தம் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் அங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவி திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் அவரை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மாணவி, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மாணவி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத்தெரிவித்தனர். பள்ளி மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்த மாணவிக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்து அதற்காக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எனத்தெரியவந்துள்ளது. பள்ளி மாணவியின் உயிரிழப்பு சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)