/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/died_26.jpg)
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய 16 வயது மகள் திருவெறும்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் சரியாக எந்தவேலையும் செய்யாமல் இருந்ததால் மாணவியை தாய் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். எதிர்பாராதவிதமாக மதியழகன் வீட்டிற்கு வந்தபோது தூக்கில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)