Advertisment

பள்ளி சிறுமி வன்கொடுமை வழக்கு; குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்  

Schoolgirl case; Pocso court sentenced the perpetrators to life imprisonment

Advertisment

கோவை மாவட்டம், காரமடை அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிரி.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ளது. பிரபலமான பள்ளி என்பதால் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். மாணவர்களில் பெரும்பாலானோர் பள்ளி பேருந்துகளில் பள்ளிக்கு வருவார்கள்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் 4 வயது சிறுமியை பள்ளி பேருந்தில் வைத்தே மயக்க ஊசி செலுத்தி, ஓட்டுநர் மற்றும் உதவியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Advertisment

அப்போது, மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் தொந்தரவு செய்தது பள்ளி பேருந்து ஓட்டுநர் ரங்கராஜபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (37) மற்றும் அவரது உதவியாளர் காரமடை கண்ணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (55) என்பதும் தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ், மாரிமுத்து இருவரையும் போலீசால் கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

வழக்கு விசாரணை முடிவு பெற்று பேருந்தின் ஓட்டுநர் கோவிந்தராஜ் மற்றும் அவரது உதவியாளர் மாரிமுத்து இருவரையும் குற்றவாளிகள் என தீர்மானித்து, இயற்கை மரணம் எய்தும் வரை அவர்களுக்கு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தும் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.

POCSO ACT Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe