Advertisment

அதிவேக பைக் பயணம்... உயிரிழந்த பள்ளி மாணவன்... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! 

 Schoolboy  after speeding on bike ... CCTV footage goes viral!

Advertisment

ஈரோடு அருகே அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவன் மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பட்டைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர்கள் மருதாச்சலம்-சுலோச்சனா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் கிரண் என்ற மகன் சிவகிரியில் உள்ள அரசுப்பள்ளியில் பயின்று வந்தார். அர்ஜுன் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில் இருசக்கர வாகனத்தை ஓட்ட முற்பட்டுள்ளார். சாலையில் வேகமாக வாகனத்தை ஒட்டி சென்ற நிலையில், சாலையில் சென்ற சரக்கு வாகனத்தை முந்த முயன்ற போது எதிரே வந்த லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே மாணவன் அர்ஜுன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe