Advertisment

ஒரு மாணவர் கூட இல்லாத அரசுப்பள்ளி!

vaa

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளிகளும் உள்ளது. அதே மாவட்டத்தில் தான் ஒரு மாணவர் கூட இல்லாத அரசு பள்ளியும் உள்ளது.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வாழைக்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த கல்வி ஆண்டு வரை சுமார் 35 மாணவ, மாணவிகள் படித்தனர். ஆனால் இந்த ஆண்டு பள்ளி திறக்கப்பட்ட நிலையில் அந்தப் பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லை என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது.

அதாவது வாழைக்கொல்லை கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கும் அருகில் உள்ள கறம்பக்குடி ஒன்றியம் டேடுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு அருகில் உள்ள முருங்கைகொல்லை கிராமத்தில் இருந்தே மாணவர்கள் சென்றனர். அதாவது முருங்கைகொல்லை கிராமத்தில் சுமார் 50 மாணவ, மாணவிகள் இருந்தும் அரசு பள்ளி இல்லை. ஒத்தையடிப் பாதையிலும் காட்டுப்பாதையிலும் சுமார் 5 கி.மீ வரை நடந்து சென்ற கல்வி கற்க வேண்டியுள்ளது என்று பல ஆண்டுகளாக அந்த கிராம மக்கள் போராடினார்கள். கடந்த ஜெ ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கார்த்திக்தொண்டைமான் அந்த கிராமத்திற்கு தொடக்கப்பள்ளி வேண்டும் என்று போராடி பெற்று வந்த நிலையில் அந்த பள்ளியை அமைச்சர் விஜயபாஸ்கர் வேறு ஊருக்கு மாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்த்து. ஆனாலும் முருங்கைகொல்லை மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

Advertisment

vill

இந்த நிலையில் தான் கடந்த ஜூன் முதல் நாளில் பள்ளிகள் திறக்கப்டப்ட நாளில் முருங்கைகொல்லை கிராம மக்களின் கோரிக்கை ஏற்க்கப்பட்டு புதிய தொடக்கப்பள்ளி திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாளிலேயே மற்ற பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்த மாவண, மாணவிகள் சுமார் 40 பேர் முருங்கைகொல்லை பள்ளியில் சேர்ந்துவிட்டனர்.

அதனால் வாழைக்கொல்லை கிராமத்தில் உள்ள அரசுப்பளிளயில் ஒரு மாணவ, மாணவி கூட இல்லாத நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து அப்பகுதியினர் கூறும் போது.. வாழைக்கொல்லையில் ஏராளமான வீடுகளும், மாணவ, மாணவிகளும் இருக்கிறார்கள். ஆனால் அந்த குழந்தைகளை ஆலங்குடி, ராசியமங்கலம் போன்ற ஊர்களில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்துள்ளனர். ஆனால் முருங்கைகொல்லை கிராமத்தில் இருந்து சுமார் 5 கி.மீ வரை நடந்து வந்த மாணவ, மாணவிகளை வைத்தே வாழைக்கொல்லை பள்ளி செயல்பட்டது. இப்போது அந்த கிராமத்திலேயே பள்ளி தொடங்கியதால் அந்த மாணவர்களும் வரவில்லை. அதனால் வாழைக்கொல்லை அரசுப்பள்ளி காலியாகிவிட்டது. பள்ளி திறந்து 2 நாட்களாக 2 ஆசிரியர்கள் மட்டும் வந்து செல்கிறார்கள். வாழைக்கொல்லை கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை சேர்த்தால் மட்டுமே அந்த அரசு பள்ளி நீடிக்கும் இல்லை என்றால் மூடப்படும் அபாயத்தில் உள்ளது. அதே போல மேட்டுப்பட்டி கிராமத்தில் படித்த முருங்கைகொல்லை மாணவர்களும் சொந்த ஊர் பள்ளிக்கு வந்துவிட்டதால் அந்த பள்ளியிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தவிட்டது. அங்கும் மாணவர் சேர்க்கை இருந்தால் சத்துணவு நீடிக்கும் என்றனர்.

மாணவர்கள் குறைந்ததால் சத்துணவு திட்டமும் வேறு பள்ளிக்கு மாற வாய்ப்புகள் உள்ளது. கிராம மக்கள் மனது வைத்தால் பள்ளிகளையும், சத்துணவு திட்டத்தையும் மூடவிடாமல் தடுக்கலாம்.

student without school
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe