
தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பாக புகார் குவிந்து வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார்ப் பள்ளியில் பயின்று வந்த சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் ஐந்து வயது சிறுமி ஒருவர் பயின்று வந்தார். பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய சிறுமியின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தது. பெற்றோர்கள் சிறுமியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
காயம் குறித்து சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து சிறுமி மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி பயின்று வந்த தனியார்ப் பள்ளியில் பள்ளி வாகனத்தில் கிளீனராக பணியாற்றி வந்த முருகன் (45) என்ற நபரை பிடித்த போலீசார் விசாரித்ததில் பள்ளி வளாகத்தில் வைத்து அவர் சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.