Advertisment

ரயில் பாதையின் குறுக்கே பழுதாகி நின்ற பள்ளி வேன்: குழந்தைகளை தவிக்கவிட்டு தப்பியோடிய ஓட்டுநர்!

skol

Advertisment

ரயில் பாதையின் குறுக்கே பழுதாகி நின்ற பள்ளி வேனில், குழந்தைகளை அப்படியே தவிக்கவிட்டு ஓட்டுநர் மட்டும் தப்பியோடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆயக்குடி விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்குச் சொந்தமான வேன், பொன்னாபுரத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, காந்தி காலணி ஆளில்லா ரயில்வே கிராசிங் அருகே வேன் வந்தபோது, திண்டுக்கல் – பழனி மார்க்கத்தில் சரக்கு ரயில் வந்துள்ளது. ரயிலை கவனித்த வேன் ஒட்டுனர், அதற்குள் வேகமாக ரயில் பாதையை கடக்க நினைத்து வேனை இயக்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பழுதாகி நடு ரயில் பாதையில் நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வேன் ஓட்டுனர், வேனை இயக்க முயற்சி செய்து பார்த்துள்ளார். முயற்சி தோல்வியடையவே, வேனை அப்படியே நிறுத்திவிட்டு அங்கிருந்து தான் மட்டும் இறங்கி தப்பி சென்றுவிட்டார். வேனில் இருந்து ஓட்டுநர் இறங்கி ஒடியதை கண்டு பள்ளிக் குழந்தைகள் செய்வதறியாது பயத்தில் கதறித்துடித்தனர்.

Advertisment

இந்தநிலையில், ரயில்பாதையின் நடுவே வேன் நிற்பதைக் கண்ட ரயில் ஓட்டுனர் துரிதமாகச் செயல்பட்டு உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சதுர்யமாக செயல்பட்ட குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுனரை பொதுமக்கள் பாராட்டினர்.

school van
இதையும் படியுங்கள்
Subscribe