
சிவகங்கை அருகே தனியார் பள்ளி வாகனம் தலை குப்புறக் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவன்உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம்வேம்பத்தூர் அருகே சார்லஸ் மெட்ரிக் பள்ளியின் வாகனமானது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சருகநேந்தல் என்ற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. உடனடியாக ஜேசிபி கொண்டுவரப்பட்டு வாகனத்தை நிமிர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்த ஹரிவேலன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த விபத்தில் காயமடைந்த இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் ஹரிவேலனின் தந்தை வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில் தாய்கற்பகம் பராமரிப்பில் ஹரிவேலன் வளர்ந்து வந்தான். தாய் கற்பகம் அதே வேம்பத்தூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். திடீரென பள்ளி வேன் கவிழ்ந்து மகன் உயிரிழந்ததாகக் கிடைத்த தகவலால் தாய் கற்பகத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரும் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)