School van overturned in field- four students injured

Advertisment

சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வேன் ஒன்று வயலுக்குள் கவிழ்ந்த சம்பவத்தில் நான்கு மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள நொச்சிக்குப்பம்-வீரசிகாமணி சாலையில் தனியார்ப் பள்ளி பேருந்துமாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த வயல் காட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நான்கு மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.

குறுகலான சாலையில் பள்ளி வாகனம் சென்ற பொழுது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் செந்தில் ராஜா முயன்ற பொழுது பள்ளி வாகனம் வயலில் கவிழ்ந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.