திருச்சி விமான நிலையப் பகுதியை சேர்ந்த 15வயது மாணவி கே.கே. நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் அப்துல் அக்கீம்(27) என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.
இந்த விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வந்ததால், அவரை பள்ளியில் இருந்து இடை நிறுத்தம் செய்துள்ளனர். இதையடுத்து அப்துல் அக்கீம், மாணவிக்கு ஒரு புதிய செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், அந்த போன் மூலம் மாணவியிடம் பாலியல் ரீதியாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.