நாமக்கல் பொட்டிரெட்டிபட்டியில் அரசு தொடக்கபள்ளியின் சுவர் இடிந்து விழுந்து 5 ஆம் வகுப்பு மாணவி காயமடைந்த சம்பவத்தில், தனது மகள்மீது பள்ளிக் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில்முழுமையாக குணமடையவில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அதிக செலவாவதால்மாணவியின் உயர் சிகிச்சைக்கு அரசுரூபாய் 40 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என மாணவியின் பெற்றோர்உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.