School teacher and 60-year-old man arrested in POCSO case trichy

Advertisment

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவிக்கு சில தினங்களுக்கு முன்பு கைகால் முகத்தில் வீக்கம் ஏற்பட்டது. இதற்காக சிறுமியின் தாய் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் காண்பித்தார். அப்போது சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தபோது சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்ததுதெரிய வந்தது.

இதையடுத்து அரசு மருத்துவமனைமருத்துவர்கள் திருச்சி சமூக நலத்துறைஅதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். அதன் பேரில் சிறுமியிடம் விசாரணைநடத்திய லால்குடி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் கர்ப்பத்திற்கு அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருக்கும் சதீஷ்குமார்(40) என்பவரும், சந்திரசேகர்(60) என்ற முதியவரும் தான் காரணம் என சிறுமி வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில், இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.