
சென்னை அம்பத்தூரில் பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் கூச்சலிடுவது, படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு இடையூறு செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து போலீஸாருக்குத்தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்தபோலீஸாரைக் கண்டவுடன் மாணவர்கள் ஓட்டம் எடுத்தனர்.
இன்று சென்னையில்பாரிமுனை நோக்கிச் செல்லக்கூடிய பேருந்தில் ஏறிய சில பள்ளி மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூச்சலிட்டனர். மேலும் சில மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்ய முற்பட்டனர். இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் போலீஸாருக்குத்தகவல் தெரிவித்த நிலையில் பேருந்தைப் பின்தொடர்ந்து வந்த போலீஸார் அம்பத்தூர் பாடி மேம்பாலம் அருகே பேருந்தை நிறுத்தினர். லத்தியுடன் போலீஸார் வந்ததைக் கண்ட பள்ளி மாணவர்கள் சிதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.சிக்கிய சில மாணவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
Follow Us