Advertisment

செல்போனில் கேம் விளையாண்டபடி கடக்க முயன்ற பள்ளி மாணவர்கள்; ரயில் மோதி விபத்து

School students trying to cross while playing games on cell phones; Train collision accident

Advertisment

செல்போனில் கேம் விளையாடியபடியே மாணவர்கள் இருவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி வீசப்பட்ட சம்பவத்தில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது புத்திர கவுண்டம்பாளையம். ஏத்தாப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்த பகுதியில் ரயில்வே தண்டவாளம் பகுதியில் இன்று காலை 11:30 மணியளவில் சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தினேஷ் (16), அரவிந்த் (16) என்ற இரண்டு 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். இருவரும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டு அலட்சியமாக தண்டவாளத்தை கடக்கமுயன்றதாகக் கூறப்பட்ட நிலையில் ரயில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட அரவிந்தை மீட்ட போலீசார் அவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தினேஷ் உடல் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மொபைலில் கேம் விளையாடிக் கொண்டே மாணவர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்றபொழுது ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் ஏத்தாப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police railway Salem
இதையும் படியுங்கள்
Subscribe