Advertisment

பேருந்தில் தொங்கியபடி சாலையில் காலை உரசிய மாணவர்கள்; வெளுத்த போலீசார்

School Students Travel in foot board; police warning

Advertisment

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி மாணவர்கள் அபாயகரமாகப் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசுப் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் சிலர் அடாவடியாகப் பேருந்து படியில் தொடங்கியதோடு பேருந்து மேற்கூரையில் ஏறவும் முயன்றனர்.

மேலும் சாலையில் காலை தேய்த்தவாறே பயணம் செய்தனர். இதை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் பேருந்தை தொடர்ந்து சென்றனர். போலீசார் வருவதைத்தெரிந்து கொண்ட மாணவர்கள் பேருந்து நின்றவுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். படியில் நின்று கொண்டிருந்த சில மாணவர்களை அடித்த போலீசார், மாணவர்களைகீழே இறக்கிவிட்டு எச்சரித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மையில் சென்னை போரூர் - குன்றத்தூர் சாலையில் மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி அபாயகரமாக மாணவர்கள் பயணித்ததைக் கண்டித்து மாணவர்களைத்தாக்கிய நடிகையும் பாஜகவின் நிர்வாகியுமான ரஞ்சனா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

thiruthani thiruvallur
இதையும் படியுங்கள்
Subscribe