Skip to main content

பள்ளி ஆசிரியை குளிக்கும் போது செல்போனில் வீடியோ எடுத்த பள்ளி மாணவர்கள் கைது!!

Published on 13/11/2018 | Edited on 13/11/2018

செல்போன் இன்றைய பள்ளி மாணவர்களின் வக்கிர தன்மை உள்ளவர்களாக  மாற்றி வருகிறது என்பதற்கு வையம்பட்டியில் ஆசிரியை குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமை தான் உதாரணம். 

 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள ஆவாராம்பட்டி என்கிற கிராமம் உள்ளது. அங்கே ஆசிரியர் தம்பதிகள் வசித்து வருகிறார்கள். அவர்கள் வீட்டின் அருகே வசிக்கும் பள்ளிமாணவர்கள் 3 பேர் ஆசிரியை வீட்டில் குளிக்கும் போது குளியல் அறையில் உள்ள கண்ணாடி வழியே செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இதே போன்று எடுத்திருக்கிறார்கள். 

 

teacher

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் ஆசிரியை வீட்டில் குளித்துக்கொண்டிருக்கும் போது கண்ணாடி ஜன்னல் வழியே யாரோ நம்மை பார்பது போன்று உணர்ந்த ஆசிரியர் சத்தம் போட்டிருக்கிறார். அந்த நேரத்தில் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார்கள். இதனால் ஆசிரியை அதிர்ச்சியடைந்து ஏதும் வீடியோ எடுத்திருப்பார்களோ என்கிற சந்தேகம் அடைந்து ஆசிரியை பக்கத்து வீடுகளில் வசிக்கும் மாணவர்களை அழைத்து கண்டித்திருக்கிறார். ஆனால் மாணவர்கள் தங்களுக்கு எதுவும் சம்மந்தம் இல்லை என்பது போல் நடந்திருக்கிறார்கள்.

 

அடுத்த சில நாட்களில் ஆசிரியையின் வீட்டிற்கு அவரின் உடலில் உள்ள அங்கங்கள் ஒவ்வொன்றையும் வர்ணித்தும், அந்த படமும் வீடியோவும் இருப்பதாக ஒரு கடிதம் எழுதி ஆசிரியையின் வீட்டின் உள்ளே போட்டு ஆசிரியைக்கு இன்னும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆசிரியையின் இந்த பீதியை பார்த்து மாணவர்கள் ரசித்திருக்கிறார்கள். 

 

அந்த கடிதத்தை பார்த்த ஆசிரியையும் அவரது கணவரும் அதிர்ச்சியடைந்து இனியும் வெளியே சொல்லாமல் விட்டால் சரியாக இருக்காது என்று நினைத்து வையம்பட்டி காவல் ஆய்வாளரிடம்  புகார் கொடுத்திருக்கிறார்.

 

விசாரணையில் மாணவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரித்ததில் வீடியோ எடுத்தது உண்மை என்றும். அவர்கள் ஆசிரியை மட்டும் அல்ல குளியல் அறையில் சத்தம் கேட்கும் பொழுதுதெல்லாம் அவர்கள் செல்போனில் வீடியோ எடுப்பதையே வழக்கமாக கொண்டிருப்பது அந்த வீடியோக்களை பார்த்தபோது தெரிய வந்தது. அவர்கள் 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். 

 

மாணவர்கள் 3 பேரும் அந்த ஆசிரியையின் பள்ளியில் படிப்பவர்கள் என்பது குறிப்பிடதக்கது. மணப்பாறையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த மாணவர் தான் எடுத்த வீடியோவை 12-ம் வகுப்பு படிக்கும் அவரது சகோதரர் மற்றும் 16 வயதுடைய மற்றொரு மாணவருக்கும் காண்பித்துள்ளார். அந்த காட்சியை 3 மாணவர்களும் பார்த்து ரசித்ததும் தெரிய வந்தது.

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.