Advertisment

ஆசிரியர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பள்ளி மாணவர்கள்!

School students paid respect to the teachers by throwing flowers

Advertisment

நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈரோட்டில் கருங்கல்பாளையம் காவிரி சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று மாணவ மாணவிகள் தங்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு நெற்றியில் பொட்டு வைத்தும் கையில் ரோஜா பூ கொடுத்தும், பொன்னாடை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர் மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று வாழ்க்கையில் மேன்மை பெற வேண்டும் என ஆசிரியர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் ஆசிரியர்களுக்குப் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்திய. சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

students teachers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe