Advertisment

ஓமலூரில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

School students give enthusiastic welcome to the Chief Minister in Omalur

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்படும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக சேலம் மேட்டூர் அணையில் இருந்து 92 ஆவது ஆண்டாக இன்று பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சேலம் வந்துள்ள மு.க.ஸ்டாலின் நான்காவது முறையாக மேட்டூர் அணைக்கு வருகை தந்து பாசனத்திற்கு நீர் திறந்து வைத்துள்ளார். எட்டு கண் மதகு வழியாக முதற்கட்டமாக மூவாயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக இன்று இரவுக்குள் நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட இருக்கிறது.

Advertisment

தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வருக்கு சேலம் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் இரும்பாலை பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு புறப்பட்ட முதல்வருக்கு மேட்டூர், பஞ்சுகாளிப்பட்டி, ஓமலூர் உள்ள பகுதிகளில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வரவேற்பளித்தனர். அங்கிருந்த பொதுமக்கள் கொடுத்த மனுக்களையும் தமிழக முதல்வர் பெற்றுக் கொண்டார்.

Advertisment
Mettur Dam Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe