Advertisment

வந்த வேகத்தில் பைக்குடன் கிணற்றில் விழுந்த பள்ளி மாணவர்கள்; ராசிபுரத்தில் பரபரப்பு

 School students fell into the well with the bike at high speed; Bustle in Rasipuram

Advertisment

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நிலைதடுமாறி கிணற்றுள் விழுந்த நிலையில் நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

ராசிபுரம் மாவட்டம் நாமக்கல் அருகே உள்ளது பிலிப்பாகுட்டை. அந்தப் பகுதியில் அரசு பள்ளியில் பத்தாவது படித்து வரும் மாணவர்கள் உட்பட மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது நிலைதடுமாறி விவசாய கிணற்றுக்குள் உள்ளே வாகனத்துடன் விழுந்தனர். அவர்களை காப்பாற்ற இரண்டு மாணவர்கள் கிணற்றில் இறங்கிய நிலையில் அனைவரும் சிக்கிக்கொண்டனர்.

உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் முதற்கட்டமாக இரண்டு மாணவர்களை உயிருடன் மீட்டுள்ளனர். நிதிஷ்குமார், அபினேஷ் ஆகிய இரண்டு மாணவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தகவல் அந்த பகுதியில் பரவிய நிலையில் அக்கம்பக்கத்தில் உள்ள கிராமமக்கள் திரண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bikers namakkal rasipuram
இதையும் படியுங்கள்
Subscribe