School students conflict; Parent assault video goes viral

Advertisment

நெல்லையில் பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்கு அரிவாளுடன் வந்த சம்பவங்கள் அண்மையாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் மோதல் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இரண்டு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெற்றோர் ஒருவர் சிறுவன் ஒருவனை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரே பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவர்களுக்கு இடையே பள்ளிக்கூடத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதன் காரணமாக வீட்டிற்கு அருகிலும் இரண்டு மாணவர்களும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் சிறுவன் ஒருவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர் தாக்குதலில் ஈடுபட்ட சிறுவனின் வீட்டுக்குச் சென்று வெளியே இழுத்து வந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் மத்தியிலேயேகாதை பிடித்து இழுத்துச் சென்று தாக்குதலுக்கு உள்ளாக்கியதோடு ஆபாசமாக திட்டியுள்ளனர். சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.