/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_114.jpg)
“அப்ப நம்ம மாநிலத்தோட பேரு தமிழ்நாடுதானா?சரி இன்னொரு கேள்விகேட்கவா?” எனத்தமிழ்நாடு குறித்து அடுத்த தலைமுறையினரை அப்டேட் செய்யும் ஆசிரியையின் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயேதன்னுடைய பெயரிலேயே நாடு என்ற பெருமையைக் கொண்ட மாநிலம்தமிழ்நாடுதான். பல்வேறு தனித்துவங்களையும், பழமையான வரலாற்றுப் பின்னணியையும்கொண்ட தமிழ்நாடுஇந்தியாவின் முக்கிய மாநிலமாகத்திகழ்ந்து வருகிறது. இதற்கு, கடந்த 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்றுஅறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோதுதமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்கள் முன்புசென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, தமிழ்நாடு எனச் சொல்வதைவிடத்தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் எனப் பேசியிருந்தார். இந்தக் கருத்துதமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றிதிருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்நாடு அரசியல் கட்சித்தலைவர்களும்ஆளுநர் ரவியின் பேச்சுக்குகடும் கண்டனங்களைத்தெரிவித்து வருகின்றனர். மேலும், ஹேஷ்டேக் தமிழ்நாடு எனட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களோடு சேர்ந்துகொண்டு ஆசிரியை ஒருவர்வெளியிட்ட வீடியோ காட்சிதற்போது சோசியல் மீடியாவில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், பள்ளி ஆசிரியை ஒருவர், “இந்த மாநிலத்தோட பெயர் என்ன என்று கேட்க, அதற்கு அந்த மாணவர்கள் தமிழ்நாடுதான்மிஸ் எனக் கூறுவார்கள். இந்தியாவோட மேப்ல என்ன எழுதியிருக்கும். அதுலயும் தமிழ்நாடுன்னுதான் இருக்கும் மிஸ். அதுல மட்டும் இல்ல எல்லா இடத்துலயும் தமிழ்நாடுன்னுதான் இருக்கும் மிஸ் எனக் கூறியிருப்பார்கள். அப்ப நம்ம மாநிலத்தோட பேரு, தமிழ்நாடுதானா?சரி அப்ப நா இன்னொரு கேள்வி கேட்குறேன்... அதுக்கு சரியா பதில் சொல்றிங்களானு பாப்போம்... இந்திய அரசியலமைப்பு சட்டத்துல இந்திய நாடுன்னு இருக்குமா... இந்திய ஒன்றியம்னு இருக்குமா? எனக் கேட்க, அதற்கு அந்த மாணவர்கள் சற்றும் யோசிக்காமல், இந்திய ஒன்றியம்னுதான் எழுதியிருக்கும்” எனத்தடாலடியாகக் கூறுகிறார்கள். தமிழ்நாடு குறித்து அடுத்த தலைமுறையினரை அப்டேட் செய்யும் ஆசிரியையின் வீடியோதற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
- சிவாஜி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)