School student passes away in puthukottai in bike accident

புதுக்கோட்டை மாவட்டம், சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ். இவர் அரசுப் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி அரசு மருத்துவமனை செவிலியர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகன் பெயர்மெகுல் (15). இவர்கள் கீரமங்கலம் ஒட்டியுள்ள செரியலூர் இனாம் கிராமத்தில் வசித்து வருகின்றனர். மெகுல் காரைக்குடியில் ஒரு தனியார்பள்ளியில் +1 படித்து வரும் நிலையில் சனி, ஞாயிறு பள்ளி விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார்.

Advertisment

சனிக்கிழமை மாலை தனது வீடு அருகே உள்ள தனது பெரியம்மா வீட்டில் நின்ற பெரியம்மா மகனுடைய விலை உயர்ந்த பைக்கை எடுத்துக் கொண்டு, தனது நண்பர்களான காந்திஜி ரோடு செல்வராஜ் மகன் யுகராஜன் மற்றும் சில நண்பர்களுடன் ஒரே நேராக இருக்கும் குளமங்கலம் வடக்கு முந்திரிக்காடு சாலை வழியாக கொத்தமங்கலம் சென்ற போது, கொத்தமங்கலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் அருகே,அதிவேகமாகச் சென்ற பைக் நிலை தடுமாறிச் சாலையை விட்டு இறங்கிசற்று தூரம் ஓடிப் பள்ளத்தில் இறங்கி, மரங்களில் மோதிச்சாய்ந்ததில் மெகுல், யுகராஜன் இருவரும் படுகாயங்களுடன் பேச்சு மூச்சற்று விழுந்தனர். பைக் உடைந்து நொறுங்கிக் கிடந்தது.

Advertisment

School student passes away in puthukottai in bike accident

சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த இரு சிறுவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து மெகுலை அங்கிருந்து திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கே போய்ச் சேர்ந்த போது மெகுல் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லி சிறிது நேரத்தில், பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றப் பல காலம் வாழ வேண்டிய மெகுலின் உயிர் கண் இமைக்கும் நேரத்தில் பறிபோனது.

தகவல் கேட்டு பெற்றோர்களும், உறவினர்களும் கதறித்துடித்த துடிப்பை யாராலும் பார்க்க முடியவில்லை. அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை கீரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேதப் பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்தத் தகவல் வெளியான நிலையில், பரபரப்பான நிலையில் பெற்றோர்கள் சிலர் நம்மிடம் ‘ஒவ்வொரு வீட்டிலும் பெயர் சொல்ல ஒரு பிள்ளை என்று ஒரு ஆண் குழந்தை பெற்று ரொம்பவே செல்லமாக வளர்க்கின்றனர். அந்தக்குழந்தைகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். நமக்குக் கேட்டது எல்லாம் கிடைக்கிறதே என்பதால் ஆபத்தான பொருட்களையும் வாங்கிவிடுகின்றனர்.

ஆபத்தானபைக் என்று பெற்றோர்கள் வாங்கித்தர மறுக்கும்போது, பெற்றவர்களிடமே உயிரை மாய்த்துக்கொள்வதாக மிரட்டியே பைக் வாங்கி ஆபத்தான சாகசங்களைச் செய்கின்றனர். இதன் விளைவால் பல இளம் உயிர்கள் பறிபோய்விட்டது. இனிமேலாவது பெற்றோர்கள் ஆபத்தானது என்பதைத்தங்கள் பிள்ளைகளிடம் பேசிப் புரிய வைத்து, இதுபோன்ற ஆபத்தான பைக்குகளை வாங்கிக்கொடுப்பதைத்தவிர்ப்பது சிறந்தது. சிறுவர்களும் இதனைப் புரிந்து நடப்பது நல்லது’ என்கின்றனர்.