
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீபரம்புதூரில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவி தனக்குத் தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீபரம்புதூர், ஆனந்த மேடு பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி, பாலையூரில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவர் நேற்று மாலை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மாலை தனக்குத்தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து, சிறுகனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.