பள்ளி விடுதியில் இரவு உணவு சாப்பிடச் சென்ற மாணவன் உயிரிழப்பு

school student passed away from hostel karur

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், ஆத்தூர் மேடு, கொங்கு நகரைச்சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சந்தோஷ் (16). கரூர் அடுத்த காக்காவடி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டிற்கும் பள்ளிக்கும் வெகு தூரம் என்பதால், மாணவர் சந்தோஷ் பள்ளி விடுதியிலேயே தங்கிப் படித்து வந்தார்.

இந்நிலையில், மாணவர் சந்தோஷ் நேற்று இரவுபள்ளி விடுதியிலுள்ளஉணவகத்தில் இரவு உணவு சாப்பிடச் செல்லும்போது, வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் பள்ளி நிர்வாகத்தினர் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சந்தோஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத்தெரிவித்தனர்.

இதனையடுத்துதகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தஅரவக்குறிச்சிபோலீசார், மாணவனின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்துபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உடற்கூராய்வு முடிந்த பிறகே முழுமையான தகவல் தெரியும் என்று மாணவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

karur police
இதையும் படியுங்கள்
Subscribe