பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டத்தில், உணவகம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வருபவர் விக்னேஷ் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியைக் கடந்த டிசம்பர் மாதம் ஆசை வார்த்தை கூறி, அழைத்துச் சென்று ரகசியமாகத்திருமணம் செய்துள்ளார். பின்னர், மாணவியை அவரது வீட்டிற்கே திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலையில், தற்போது சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து தனது மனைவியைத்தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறு செய்துள்ளார்.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ் குமாரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.