Advertisment

பள்ளி மாணவரை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த கும்பல்... கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரைசேரந்த வினோத்குமார். இவருடைய மூத்த மகன் சஞ்சய் வயது 14, இவன் புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.தினந்தோறும்அனுசுயா நகரில் டியூசனுக்கு சென்றுவிட்டு மீண்டும்இரவு ஏழு முப்பது மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கம்.

Advertisment

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எட்டு முப்பது மணி வரை சிறுவன் வீட்டுக்கு வரவில்லை. இதனால்சந்தேகம் அடைந்த வினோத்குமார் சஞ்சய் டியூஷன் படிக்கும் இடத்தில் சென்று விசாரித்துள்ளார்.ஆனால் அங்கு சஞ்சய் ஏழு முப்பது மணிக்கே கிளம்பி விட்டதாக தெரிவித்தனர்.

Advertisment

yy

இந்தநிலையில் சஞ்கசய் தந்தைக்கு ஒரு போன் கால் ஒன்று வந்துள்ளது. அதில்உங்கள் மகன் வேண்டும் என்றால் பத்து லட்சம் பணத்தோடு வாங்க என்று கூறியுள்ளனர். சஞ்சய் காணாமல் போனது உறுதி செய்யப்பட்ட பிறகு போலீசில் தனது மகன் காணாமல்போனது குறித்து புகார் செய்தார்வினோத்குமார்.

கடத்தி வந்தவர்கள்போதையில் இருந்த சூழ்நிலையில் அங்கிருந்து தப்பித்த சஞ்சய் சண்முகபுரம் அருகே நின்றிருந்த ஆட்டோ டிரைவரிடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எப்படி செல்ல வேண்டும் என கேட்க,ஆட்டோடிரைவர்கொடுத்த தகவலின் படி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உதவி கமிஷனர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனிடம் விசாரணை செய்தனர். அப்போது ஒருவர் தன்னை காரில் கடத்தி சென்று அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து இருந்தார், 10 லட்சம் கொடுத்தால்தான் உன்னை விடுவேன் என மிரட்டினர். அங்கிருந்து நைசாக தப்பித்து வந்து விட்டேன் என மாணவன் கூறியுள்ளான்.

உடனே போலீசார்சிறுவனைஅடைத்து வைத்திருந்த வீட்டிற்கு சென்று அங்கு இருந்த வாலிபரிடம் விசாரித்தபோது, கடத்தலில் ஈடுபட்டவர்அம்பத்தூர் அடுத்த சண்முகபுரம் மசூதி தெருவைச் சேர்ந்தகார்டிரைவரானலோகேஸ்வரன்என தெறியவந்தது. சிறுவனைவைத்து பணம் பறிப்தே எங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் எப்படி தூங்கினோம் என்றுதான் தெரியவில்லைஅந்த சமயத்தில் தான் தப்பித்து விட்டான் எனகூறியுள்ளனர்.

பின்னர் போலீசார் இருவரையும் ராஜமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதுபற்றி ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்துவருகிறார்.

police Kidnapping Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe