Advertisment

தேர்வு எழுதிய மாணவியிடம் சீண்டல்... ஆசிரியர் கைது!

school student incident police arrested teacher

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி, திருப்புதல் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது தேர்வு கண்காணிப்பிற்காக வந்திருந்த ஆசிரியர் ராஜ்குமார் (வயது 52) தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

Advertisment

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்து கூறியதோடு, காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். மாணவியிடமும் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை செய்த காவல்துறையினர் பள்ளி ஆசிரியர் ராஜ்குமாரை கைது செய்தனர்.

Advertisment

ஆசிரியர் ராஜ்குமார் கைது செய்யபட்ட தகவல் அறிந்த சில உள்ளூர் அரசியல்பிரமுகர்கள் ஆசிரியர் மீது வழக்கு வேண்டாம் என்று காவல்துறையினரைவலியுறுத்தியதாகவும், ஆனால் ”மாணவிக்கு பாலியல் தொல்லை என்பது பெரிய குற்றம் நாங்கள் விட்டால் பெற்றோர் மேலும் புகாரை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வார்கள்” என்றகாவல்துறையினர், வழக்குப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

schools student Thanjavur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe