A school student incident in manamadurai

சிவகங்கையில் நாவல் மரத்தில் பழம் பறிக்க சென்ற பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பள்ளி மாணவர்கள் அங்கிருந்த நாவற்பழத்தைப் சென்றுள்ளனர். இதில் மரத்தில் ஏறி பழத்தைப் பறிக்க முற்பட்டதில் மாணவர்கள் ஏறிய மரத்தின் கிளை எதிர்பாராத விதமாக ஒடிந்து அருகிலிருந்த மின்கம்பி மேலே விழுந்தது. இதில் 9 ஆம் வகுப்பு மாணவன் மனோஜ் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்தான். இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு மாணவனான விக்னேஷ்வரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். பள்ளி மாணவர் மரத்தில் பழம் பறிக்க முயன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மானாமதுரையில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.